கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் 2 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் வீசி மொத்தமாக 100 ரன்கள் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார். 2ஆவதாக ஆஸ்திரேலியா உலகக் கோப்பை கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.
ஆனால், ஒரு பவுலராக கேகேஆர் அணியில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. 4 ஓவர்கள் வீசி 53 ரன்கள் வாரிக் கொடுத்துள்ளார். இதே போன்று நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 2ஆவது போட்டியில் முதல் 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்துள்ளார்.
போட்டியின் முதல் ஓவரிலேயே 7 ரன்கள் கொடுத்தார். அடுத்த ஓவரில் 17 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஓவர் கொடுக்கவில்லை. அதன் பிறகு 16ஆவது ஓவர் வீச வந்தார். இந்த ஓவரில் முதல் 5 பந்துகள் நன்றாக வீசிய நிலையில் 6ஆவது பந்தில் ஒரு பவுண்டரி உள்பட 7 ரன்கள் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கடைசி ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில், மட்டும் 2 சிக்ஸர்கள் உள்பட 16 ரன்கள் உள்பட மொத்தமாக 4 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்துள்ளார். இந்திய பவுலர்கள், பேட்ஸ்மேன்களுக்கு எல்லாம் சம்பளம் குறைவு தான். இந்த நிலையில் தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசரகான கவுதம் காம்பீர், மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுப்பதில் விடாப்பிடியாக இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.24.75 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் எப்படி பந்து வீசுகிறார் என்பதை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். 2 போட்டிகளில் 8 ஓவர்கள் வீசி மொத்தமாக 100 ரன்கள் கொடுத்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் ஒரு போட்டிக்கு ரூ.1.76 கோடி சம்பளம் பெறுகிறார். 2 போடிகளுக்கு மொத்தமாக ரூ.3.52 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். மேலும், ஸ்டார்க் வீசும் ஒவ்வொரு பந்திற்கும் ரூ.7,36,607 ஊதியமாக வழங்கப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.