
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார்.
ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முழுக்க இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் விராட் கோலி. ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலில் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை ஜெயித்து சாதனைகளை படைத்தது. சாஸ்திரியின் பதவிக்காலத்தில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
ரவி சாஸ்திரிக்கும் விராட் கோலிக்கும் இடையே நல்ல புரிதலும் உறவும் இருக்கிறது. சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்ததும், கோலியும் கேப்டன்சியிலிருந்து விலகினார். அந்தளவிற்கு இருவருக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது.
இந்நிலையில், ரவி சாஸ்திரியின் 60வது பிறந்தநாளான இன்று, அவருக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் விராட் கோலி.
மேலும் சச்சின் டெண்டுல்கர், அஜிங்க்யா ரஹானே, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் ரவி சாஸ்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.