RR vs RCB: ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்..? நாக் அவுட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 27, 2022, 02:14 PM IST
RR vs RCB: ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்..? நாக் அவுட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான 2வது தகுதிப்போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை  பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 2வது தகுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. 

முதல் தகுதிப்போட்டியில் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸும், எலிமினேட்டரில் ஜெயித்த ஆர்சிபியும் 2வது தகுதிப்போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும்.

நாக் அவுட் போட்டியான இதில், இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கும். இரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), விராட் கோலி, ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SRH-ன் இமாலய இலக்கை தவிடுபொடியாக்கிய பஞ்சாப்.. 200+ ரன்களை சேஸ் செய்து உலக சாதனை!
Vaibhav Suryavanshi Net Worth: 15 வயதில் கோடீஸ்வரன்.. சொகுசு பங்களா, கார்கள்.. பிரம்மிக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி சொத்து மதிப்பு!