கோலி காலில் விழுந்தது குத்தமா? ரசிகரை தனியா அழைத்துச் சென்று கும்மாங்குத்து குத்திய ஊழியர்கள்: வீடியோ வைரல்!

By Rsiva kumar  |  First Published Mar 27, 2024, 8:36 PM IST

பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை அழைத்துச் சென்று கும்மாங்குத்து குத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.


பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 6ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 176 ரன்கள் குவித்தது. பின்னர் 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி பேட்டிங் செய்தது. இதில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிரிக்கெட்டில் சச்சின், தோனி வரிசையில் ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட பிரபலங்கள் வரிசையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளனர்.

Rohit 200th IPL: தோனி, கோலி 200 ஐபிஎல் போட்டி சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா – சச்சின் கொடுத்த கௌரவம்!

Tap to resize

Latest Videos

அவர்களை எப்படியாவது பார்த்துவிட வேண்டும், அவர்களது காலில் விழுந்து வணங்க வேண்டும், அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர் ஏராளம். இந்த நிலையில் தான் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளையும் மீறி மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் ஓடி வந்தார்.

குவேனா மபகாவை களத்தில் இறக்கிய மும்பை இந்தியன்ஸ் – டாஸ் வென்ற ஹர்திக் பவுலிங் தேர்வு!

அப்போது அவர் விராட் கோலி காலில் விழுந்து அவரை கட்டியணைக்க முயற்சித்தார். ஆனால், அதற்குள்ளாக பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்த ரசிகரை இழுத்துச் சென்றனர். ஆனால், அப்படி இழுத்துச் செல்லப்படும் ரசிகர்களுக்கு என்ன நடக்கும் என்று ஒரு போதும் யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த நிலையில் தான் அந்த ரசிகரை இழுத்துச் சென்ற நிலையில் அவரை சரமாரியாக அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கிறது.

SRH vs MI போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லையா? ஃபிட்னெஸ்க்கு அனுமதி மறுப்பு!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pradeep M (@pradeepm30)

 

click me!