Rohit 200th IPL: தோனி, கோலி 200 ஐபிஎல் போட்டி சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா – சச்சின் கொடுத்த கௌரவம்!

By Rsiva kumar  |  First Published Mar 27, 2024, 8:09 PM IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இன்று தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் ரோகித் 200 என்று அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் முறையாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக டிராபியை தட்டி தூக்கியவர் ரோகித் சர்மா. அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதில் 2013, 2015, 2017, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் டிராபியை வென்று கொடுத்துள்ளார்.

குவேனா மபகாவை களத்தில் இறக்கிய மும்பை இந்தியன்ஸ் – டாஸ் வென்ற ஹர்திக் பவுலிங் தேர்வு!

Tap to resize

Latest Videos

 

A moment for the ages! 💙 pic.twitter.com/2cdXw1GkzQ

— Mumbai Indians (@mipaltan)

 

இதுவரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 244 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 6254 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், அதிகபட்சமாக 109 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு முறை சதமும், 42 முறை அரைசதமும் அடித்துள்ளார். அதோடு, 561 பவுண்டரி, 258 சிக்சர்கள் விளாசி, 99 கேட்சுகள் பிடித்துள்ளார். இன்று தனது 245 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அதோடு, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இன்று தனது 200ஆவது போட்டியில் விளையாடுகிறார். இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனி (252, சிஎஸ்கே 221) மற்றும் விராட் கோலி (239) ஆகியோர் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

SRH vs MI போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லையா? ஃபிட்னெஸ்க்கு அனுமதி மறுப்பு!

இன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது 200ஆவது போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா 199 போட்டிகள் வரையில் 5084 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 34 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 109 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங்கிடமிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்துள்ளார்.

பணம் சம்பாதிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒரு கேப்டனாக 87 போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் இன்று தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ரோகித் சர்மாவிற்கு மும்பை இந்தியன்ஸ் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போன்று சச்சின் டெண்டுல்கர், ரோகித் 200 என்று அச்சிடப்பட்ட சிறப்பு ஜெர்சியை பரிசாக அளித்துள்ளார்.

MI வீரர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த திலக் வர்மா – வைரலாகும் வீடியோ!

 

Players to have played 200+ matches for a team in IPL history:

Virat Kohli - RCB (239).

MS Dhoni - CSK (221).

Rohit Sharma - MI (200*).

- Three Icons of World Cricket. 🐐 pic.twitter.com/IuVsDxyAPM

— CricketMAN2 (@ImTanujSingh)

Note: Image by MI Twitter

click me!