மகிழ்ச்சியின் உச்சகட்டம், நார்வே நாட்டு டான்ஸ் குழுவோடு சேர்ந்து டான்ஸ் ஆடிய விராட் கோலி!

By Rsiva kumar  |  First Published Mar 14, 2023, 7:30 PM IST

விராட் கோலி நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 3ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து 4ஆவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் குவித்து பல சாதனைகளை கடந்தார். ஆனால், இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

ஒரு ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்கிறேன்; மனசாட்சி சொல்லியிருச்சு - ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக்!

Tap to resize

Latest Videos

இதற்கிடையில், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலமாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பிடியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

களைகட்டத் தொடங்கிய ஐபிஎல் டிக்கெட் விற்பனை - எங்கு, எப்படி வாங்கலாம்? டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

இந்த லையில் விராட் கோலியின் டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், Quick Style என்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து Ishq Ho Gaya என்ற டலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். Baar Baar Dekho என்ற படத்தில் இடம் பெற்றுள்ள  Kala Chashma என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மீண்டு வருமா ஆர்சிபி: இதெல்லாம் நடந்தால் ஒரு வாய்ப்பு இருக்கு; இல்லைன்னா இறைவன் விட்ட வழி தான்!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Quick Style (@thequickstyle)

 

click me!