WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Mar 14, 2023, 07:29 PM IST
WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளும் சிறப்பாக ஆடிவருகின்றன.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஆடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் கடைசிக்கு முந்தைய இடமான 4ம் இடத்திலும், ஒரு வெற்றியை கூட பெறாத ஆர்சிபி அணி கடைசி இடத்திலும் உள்ளன.

ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி

மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதுகின்றன. வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியுள்ள நிலையில், 2வது வெற்றியை பெறும் முனைப்பில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சபினேனி மேகனா, சோஃபியா டன்க்லி, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, அன்னாபெல் சதர்லேண்ட், சுஷ்மா வெர்மா, கிம் கார்த், டனுஜா கன்வார், ஸ்னே ராணா (கேப்டன்), மன்சி ஜோஷி.

நான் 40 ரன் அடிச்சப்பவே கண்டிப்பா 150 அடிப்பேன்னு தெரியும்..! ராகுல் டிராவிட்டிடம் மனம் திறந்த விராட் கோலி

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜார், அமெலியா கெர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிதா, சாய்கா இஷாக்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்.. சிக்சர் மன்னன் விலகல்.. பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்!
பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா! சூர்யாவின் அதிரடிக்கு கிடைத்த முதல் பரிசு! அமெரிக்காவை காலி செய்த சிராஜ் அண்ட் அர்ஷ்தீப் காம்போ!