விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே மைதானத்தில் இன்று தனது 110 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட், 5 டி20 கொண்ட தொடரில் விளையாடுகிறது. டொமினிக்கா மைதானத்தில் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமானார். அதன் பிறகு 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகளின் பட்டியல்!
இதில், 8479 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதில் 28 சதமும், 28 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 254 ரன்கள் (நாட் அவுட்) எடுத்துள்ளார். இந்த நிலையில், தான் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதுவும் அதே மைதானத்தில் தனது 110 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார்: பாகிஸ்தானில் போட்டி இல்லை!
இந்த நிலையில், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதே மைதானத்தில் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று விராட் கோலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், கூறியிருப்பதாவது: கரீபியனில் தான் அனைத்தும் தொடங்கியது. குறிப்பாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு மீண்டும் இங்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
இதனை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நாங்கள் அனைவரும் ராகுல் பாயை நோக்கிப் பார்த்தோம். கடந்த 2011 ஆம் ஆண்டுகளிலிருந்து நாங்கள் இருவரும் வெவ்வேறு வேடங்களில் திரும்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டோம். வாழ்க்கை முழுவதும் வந்து விட்டது. அது ஆச்சரியாமக இருக்கிறது என்று கூறியுள்ளார். விராட் கோலி அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் 112 ரன்கள் குவித்தார். அதோடு ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!