வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இன்னும் 2 சதங்கள் அடிப்பதன் மூலமாக சுனில் கவாஸ்கர் சாதனையை விராட் கோலி முறியடிக்க உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டொமினிகாவில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி தொடங்கியுள்ளது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் தனது முதல் ஹோம் டெஸ்ட் தொடரை தொடங்குகிறது.
ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார்: பாகிஸ்தானில் போட்டி இல்லை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி பல சாதானைகளை படைத்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக அவர் படைக்க இருக்கும் சாதனைகள் என்ன என்று பார்க்கலாம்.
அதிக ரன்கள் குவித்த வீரர்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அனைத்து பார்மேட்டுகளிலும் 70 போட்டிகளில் விளையாடி 3653 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்
தற்போது அடுத்தடுத்த நடக்கவுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 467 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் 4,120 ரன்கள் குவித்து சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
கரீபியன் கிங்:
கரீபியன் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விராட் கோலி அனைத்து பார்மேட்டுகளையும் சேர்த்து 27 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் உள்பட 1365 ரன்கள் குவித்துள்ளார். அடுத்தடுத்து நடக்கவுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் எடுத்தால், வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிக ரன்கள் குவித்த ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்பார்.
இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் 29 போட்டிகளில் விளையாடி 1838 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!
அதிக சதங்கள்:
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் 2 சதங்கள் அடித்தால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைப்பார். 13 சதங்கள் அடித்து சுனில் கவாஸ்கர் முதலிடத்திலும், 12 சதங்களுடன் ஜாக் காலிஸ் 2ஆவது இடத்திலும், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி 11 சதங்களுடன் 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.