ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இலங்கையில் நடக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டொமினிகாவில் நடக்கிறது. இந்தப் போட்டியை ஜியோ சினிமா மற்றும் பேன் கோடு ஆப்பில் தான் நேரடியாக பார்க்க முடியும்.
ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
இதையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் தொடங்குகிறது. ஆனால், அதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் சென்று அங்கு கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் கடந்து விட்டது. பாகிஸ்தானும், இந்தியாவிற்கு வந்து கிரிக்கெட் விளையாடவில்லை.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்ததாக அறிவித்தது. அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று அறிவித்தது.
ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!
பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள்:
பாகிஸ்தான் – நேபாள்
வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் – இலங்கை
இலங்கை – வங்கதேசம்
இந்த நிலையில், தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று உறுதிப்படுத்தினார்.
ஐசிசி தலைமை நிர்வாகிகள் சந்திப்புக்காக (சிஇசி) டர்பனில் இருக்கும் துமல், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) பிரதிநிதி தலைவர் ஜகா அஷ்ரஃப் ஆகியோர் நாளை நடக்க உள்ள ஐசிசி வாரிய கூட்டத்திற்கு முன்னதாக இந்த ஆசிய கோப்பை அட்டவணையை உறுதி செய்ய சந்தித்து பேசியுள்ளனர்.
தாய்லாந்தில் 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: அதிகாரப்பூர்வ சின்னமாக ஹனுமன் அறிவிப்பு!
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரஃபை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தான் ஆசிய கோப்பை 2023 அட்டவணை உறுதி செய்யப்பட்டது. அதன்படி, அதன்படி மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், எஞ்சிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது என்று துமல் கூறியுள்ளார்.
இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் நடத்த ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கு வர உள்ளது. இந்த நிலையில், தற்போது ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடங்குகிறது.
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!
இந்தப் போட்டி வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடைபெறும். பாகிஸ்தான், நேபாள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய 6 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாட உள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தொடரை காண ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.