43 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கலையே..? கோலியின் அதிரடி பதில்

By karthikeyan VFirst Published Mar 27, 2021, 10:07 PM IST
Highlights

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி 43 இன்னிங்ஸ்களில் கோலி ஒரு சதம் கூட அடிக்காதது குறித்த கேள்விக்கு கோலி அதிரடியாக பதிலளித்துள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, பழைய சாதனைகளையெல்லாம் தகர்த்து, புதிய மைல்கற்களை எட்டிவருகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள்(100) என்ற சாதனையை கோலி(70* சதங்கள்) தகர்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 43 இன்னிங்ஸ்களில் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக அடித்த சதத்திற்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஆடியுள்ள 43 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த கோலி, சிறப்பாக ஆடியதையடுத்து, அந்த போட்டியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் 66 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து, 43 இன்னிங்ஸ்களில் சதமடிக்காதது குறீத்த கேள்விக்கு பதிலளித்த கோலி, சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதுவரை எனது கெரியரில் விளையாடியதேயில்லை. அணிக்காக ஆடியதால் தான் இவ்வளவு குறைவான காலத்தில் என்னால் அதிக சதம் அடிக்க முடிந்திருக்கிறது. அணிக்காக பங்களிப்பு செய்வதே முக்கியம். நாம் சதமடித்தும் அணி ஜெயிக்கவில்லை என்றால், அந்த சதம் வீண். சதங்களை எண்ணிக்கொண்டிருக்க முடியாது. எப்படி விளையாடினோம் என்பதுதான் முக்கியம் என்றார் கோலி.
 

click me!