பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் மழை பெய்த நிலையில் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய போட்டியிலும் மழை பெய்த நிலையில் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது.
India vs Pakistan: வேலையை காட்டிய மழை; என்ன சோனமுத்தா போச்சா…. இப்போ மழையா? யாருக்கு சாதகம்?
கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இன்றைய போட்டியை தொடங்கினர். இதில் இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில், இருவரும் அரைசதம் அடித்தனர். அதன் பிறகு அதிரடியாக விளையாடி இருவரும் சதம் அடித்து சாதனை படைத்தனர். விராட் கோலி தனது 47ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு, ஒரு நாள் போட்டியில் 13000 ரன்களையும் கடந்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இதில், கேஎல் ராகுல் 111 ரன்னுடனும், விராட் கோலி 122 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு அவர்களது மனைவியான அனுஷ்கா சர்மா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இருண்ட இரவு கூட முடிவடையும் சூரியன் உதிக்கும் நீங்கள் எல்லாம், நான் உன்னை நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று அனுஷ்கா சர்மா கூறியிருப்பதாவது: சூப்பர் விளையாட்டு, சூப்பர் பையன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் கேஎல் ராகுல் என்றும் கூறியுள்ளார்.