இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றைய போட்டியில் மழை பெய்த நிலையில் ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்றைய போட்டியிலும் மழை பெய்த நிலையில் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது.
கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இன்றைய போட்டியை தொடங்கினர். இதில் இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில், இருவரும் அரைசதம் அடித்தனர். அதன் பிறகு அதிரடியாக விளையாடி இருவரும் சதம் அடித்து சாதனை படைத்தனர். விராட் கோலி தனது 47ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அதோடு, ஒரு நாள் போட்டியில் 13000 ரன்களையும் கடந்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இதில், கேஎல் ராகுல் 111 ரன்னுடனும், விராட் கோலி 122 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஃபஹர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். இதில் இமாம் உல் ஹன் 9 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் அசாம் 24 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 10 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்தில் கிளீன் போல்டானார்.
இதையடுத்து முகமது ரிஸ்வான் களமிறங்கினார். அவர் 1 ரன் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது. மழை நிற்காமல் பெய்தால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். ஏனென்றால், டக் ஒர்த் லீவிஸ் முறையானது ஒருநாள் கிரிக்கெட்டில் 20 ஓவருக்கு பிறகுதான் அமலுக்கு வரும். ஆதலால், இந்திய அணி 20 ஓவர்களை வீசி முடித்தால் டக் ஒர்த் முறைப்படி இந்தியா தான் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள்து.
காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்த கேஎல் ராகுல்!
ஒருவேளை 20 ஓவர்கள் முடிவதற்குள்ளாக மழை பெய்து போட்டி நடத்த முடியாமல் போனால், புள்ளிகள் பகிர்ந்து வழங்கபடும். அதே நேரத்தில் 20 ஓவருக்குள் பாகிஸ்தானை 150 ரன்களை எட்டவிடாமல் செய்திருக்க வேண்டும். தற்போது வரையில் பாகிஸ்தான் 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. முடிவு எடுப்பதற்கு இன்னும் 3 மணி நேரம் இருக்கிறது. அதற்குள்ளாக மழை நின்று போட்டி நடத்தப்பட்டால் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.