சாவு பயத்தை காட்டிட்டாங்களே பரமா மூவ்மெண்ட் - ஷமி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு!

Published : Nov 16, 2023, 08:24 AM IST
சாவு பயத்தை காட்டிட்டாங்களே பரமா மூவ்மெண்ட் - 	ஷமி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு!

சுருக்கம்

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை குறிப்பிட்டு போட்டியின் நாயகனுக்கு தகுதியானவர் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.

சண்டே பிளாஸ்டுக்காக காத்திருக்க முடியாது – சூப்பர் 7 ஷமி, யு ஆர் தி மேன் – எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டு!

பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு முகமது ஷமி அதிர்ச்சி கொடுத்தார். தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பிறகு கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் வில்லியம்சன் 73 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஷமி பந்தில் சூர்யகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Babar Azam: டி20 கேப்டனாக ஷாகீன் அஃப்ரிடி, டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம்!

இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 181 ரன்கள் குவித்தது. அதே ஓவரில் டாம் லாதம் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ தொடங்கியது. ஒரு கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதில், பிலிப்ஸ் 33 பந்துகளில் 41 ரன்கள் குவித்து பும்ரா பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

IND vs NZ: அருமையான பேட்டிங், நல்ல பந்து வீச்சு: இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள் -பிரதமர் மோடி!

அதன் பிறகு வந்த சேப்மேன் 2 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து இந்திய அணிக்கு ஆட்டம் காட்டிய டேரில் மிட்செல் 119 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 134 ரன்கள் குவித்த நிலையில் ஷமி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பின் வரிசையில் களமிறங்கிய மிட்செல் சாண்ட்னர் 9, டிம் சவுதி 9, லாக்கி ஃபெர்குசன் 6 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

India vs New Zealand, Mohammed Shami: 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷமி வரலாற்று சாதனை!

இறுதியாக நியூசிலாந்து 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பையிலிருந்து நடையை கட்டியது. நியூசிலாந்தை வீழ்த்திய நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும், 19 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு பழி தீர்த்துக் கொண்ட இந்தியா - நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கும், வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த முகமது ஷமிக்கும் சினிமா முதல் அரசியல் தலைவர்கள் வரையில் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சாவு பயத்தை காட்டீட்டாங்களே பரமா மூவ்மெண்ட், நன்றாக முடிந்தது பிசிசிஐ, முகமது ஷமி இது கடினமான ஆட்டநாயகன் விருதாக இருக்கும், போட்டியின் நாயகனுக்கு தகுதியானவர் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று இயக்குநர் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!