நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்தனர்.
Babar Azam: டி20 கேப்டனாக ஷாகீன் அஃப்ரிடி, டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம்!
பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஜோட் சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 181 ரன்கள் குவித்தது. அதன் பிறகு ஷமியின் அபார பந்து வீச்சால் வில்லியம்சன் 69 ரன்களில் ஆட்டமிழக்க, மிட்செல் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து பின்வரிசையில் களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
IND vs NZ: அருமையான பேட்டிங், நல்ல பந்து வீச்சு: இறுதிப் போட்டிக்கு வாழ்த்துக்கள் -பிரதமர் மோடி!
இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடியதைக் கண்டு எங்கு நியூசிலாந்து வெற்றி பெற்றுவிடுமோ என்று நினைக்க தோன்றியது. ரசிகர்களும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதி காத்தனர். கடைசியாக முகமது ஷமி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்கவே, இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
India vs New Zealand, Mohammed Shami: 3ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷமி வரலாற்று சாதனை!
இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான முகமது ஷமி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்தப் போட்டியில் அவர் மட்டுமே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய அத்தியாயம் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் மட்டுமின்றி இதற்கு முன்னதாக அவர் விளையாடிய 5/54, 4/22, 5/18, 2/18 என்று வரிசையாக விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியாக நேற்றைய முதல் அரையிறுதிப் போட்டியில் சிறந்த பந்து வீச்சாக 7/57 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், தான் சினிமா முதல் அரசியல் தலைவர்கள் வரையில் இந்திய அணிக்கும், முகமது ஷமிக்கும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனக்கே உரிய பாணியில் ஷமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: சூப்பர் 7 ஷமி, நீங்கள் தான் சிறந்த மனிதர், சண்டே பிளாஸ்டுக்காக காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
SUPER SEVEN SHAMI…
YOU ARE THE MAN… 🙏🏻🙏🏻🙏🏻
Can’t wait for SUNDAY BLAST…