டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய உத்தர பிரதேசம்..! அரையிறுதி போட்டிகள் விவரம்

Published : Mar 10, 2021, 04:01 PM IST
டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய உத்தர பிரதேசம்..! அரையிறுதி போட்டிகள் விவரம்

சுருக்கம்

விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி போட்டியில் டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது உத்தர பிரதேச அணி.  

உள்நாட்டு டி20 தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய உத்தர பிரதேச அணியின் விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

101 பந்தில் உபேந்திர யாதவ் 112 ரன்கள் அடித்தார். கேப்டன் கரன் ஷர்மாவும் சிறப்பாக ஆடி 83 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 280 ரன்களை குவித்தது.

281 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லலித் யாதவ் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 61 ரன்களில் ஆட்டமிழந்ததால், டெல்லி அணி, 49வது ஓவரிலேயே 238 ரன்களுக்கு சுருண்டது.

46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தர பிரதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியது. விஜய் ஹசாரே தொடரின் 2 அரையிறுதி போட்டிகளும் நாளை(மார்ச் 110 நடக்கின்றன. ஒரு அரையிறுதி போட்டியில் உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?