பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டருக்கு எதிரான போட்டியில் உஸ்மான் கவாஜா (94) மற்றும் மார்னஸ் லபுஷேனின்(73) அபாரமான பேட்டிங்கால் 20 ஓவரில் 203 ரன்களை குவித்த பிரிஸ்பேன் ஹீட் அணி, 204 ரன்கள் என்ற கடின இலக்கை சிட்னி தண்டருக்கு நிர்ணயித்துள்ளது.
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சிட்னியில் நடந்துவரும் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
சிட்னி தண்டர் அணி:
டேவிட் வார்னர், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் சங்கா, ஆலிவர் டேவிஸ், அலெக்ஸ் ரோஸ், டேனியல் சாம்ஸ், பென் கட்டிங், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), ரோஸ் பாவ்சன், உஸ்மான் காதிர்.
டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்
பிரிஸ்பேன் ஹீட் அணி:
உஸ்மான் கவாஜா (கேப்டன்), ஜோஷ் பிரௌன், மார்னஸ் லபுஷேன், மேட் ரென்ஷா, சாம் ஹெய்ன், ஜிம்மி பியர்சன் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பேஸ்லி, மைக்கேல் நெசெர், மேத்யூ குன்னெமேன், ஸ்பென்செர் ஜான்சன், மிட்செல் ஸ்வெப்சன்.
முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிரௌன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான உஸ்மான் கவாஜா, அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய நிலையில், வெறும் 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரும், சமகாலத்தின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராகவும் திகழும் உஸ்மான் கவாஜா, தான் வெறும் டெஸ்ட் வீரர் மட்டுமல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த இன்னிங்ஸை அபாரமாக ஆடினார்.
55 பந்தில் 10 பவுண்டரிகள் மட்டும் 3 சிக்ஸர்களுடன் 94 ரன்களை விளாசி உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு அபாரமாக பேட்டிங் ஆடிய மார்னஸ் லபுஷேனும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். லபுஷேன் 48 பந்தில் 73 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி. சிட்னி தண்டர் அணி 204 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவருகிறது.