Womens U19 T20 World Cup: அரையிறுதியில் நியூசி.,யை குறைவான ஸ்கோருக்கு சுருட்டிய இந்தியா! பார்ஷவி சோப்ரா அபாரம்

Published : Jan 27, 2023, 03:24 PM IST
Womens U19 T20 World Cup: அரையிறுதியில் நியூசி.,யை குறைவான ஸ்கோருக்கு சுருட்டிய இந்தியா! பார்ஷவி சோப்ரா அபாரம்

சுருக்கம்

மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 20 ஓவரில் வெறும் 107 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்திய அணி. இந்திய அண்டர்19 மகளிர் அணியின் வெற்றிக்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே தேவை.  

மகளிர் அண்டர்19 டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று பிற்பகல் இந்திய நேரப்படி ஒன்றரை மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் ஆடிவருகின்றன. மாலை 5.15 மணிக்கு தொடங்கும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானை எடுக்காதது ஏன்..? இந்திய அணி தேர்வாளர் விளக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியை தொடக்கம் முதலே ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர் இந்திய பவுலர்கள். அந்த அணியில் அதிகபட்சமாகவே பிலிம்மர் 35 ரன்கள் தான் அடித்தார். மற்ற அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் வெறும் 107 ரன்கள் மட்டுமே அடித்தது.

அவரு புடிச்சா புளியங்கொம்பு தான்.. ODI உலக கோப்பையில் கண்டிப்பா ஆடணும்..! ஆல்ரவுண்டருக்கு இர்ஃபான் பதான் ஆதரவு

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய பார்ஷவி சோப்ரா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். ரிஸ்ட் ஸ்பின்னரான பார்ஷவி சோப்ரா இந்த தொடர் முழுக்கவே அபாரமாக பந்துவீசிவருவது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: 4 ஆண்டுகளுக்கு பிறகு 'கிங்' கோலி நம்பர் 1.. யாரும் நெருங்க முடியாத மெகா சாதனை!
IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!