விரைவில் ஷோலே 2 கம்மிங்: பழங்கால பைக்கில் ஹர்திக் பாண்டியா, எம் எஸ் தோனி: வைரலாகும் பிக்ஸ்!

By Rsiva kumarFirst Published Jan 27, 2023, 12:30 PM IST
Highlights

விரைவில் ஷோலே 2 கம்மிங் என்று ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு இரு அணி வீரர்களும் ராஞ்சிக்கு வந்துள்ளனர். அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சந்திப்பின் போது ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தோனி அவர்களிடம் பேசியுள்ளார். இஷான் கிஷான் தனது ஜெர்சியில் தோனியின் கையெழுத்து வாங்கிக் கொண்டார். 

மேடையில் குத்தாட்டம் போட்ட அக்‌ஷர் படேல் - மேகா: சோஷியல் மீடியாவையே அதிர வைக்கும் வீடியோஸ்!

ராஞ்சியில் மகேந்திர சிங் தோனியை சந்திப்பதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: மஹி பாயும் இங்கே தான் இருக்கிறார். நாங்கள் அவரை சந்திப்பது மகிழ்ச்சி. நாங்களும் அவரை சந்திக்க ஹோட்டலை விட்டு வெளியில் வரலாம். மற்றபடி கடந்த ஒரு மாதங்களில் நாங்கள் விளையாடிய விதம் ஹோட்டலுக்கு ஹோட்டலாக இருந்தது. நாங்கள் சந்திக்கும் போது விளையாட்டை விட வாழ்க்கையை பற்றி தான் அதிகளவில் பேச முயற்சிப்போம். நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், அவரிடமிருந்து நிறைய அறிவு பிழிந்து எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்ட அக்‌ஷர் படேல்: வைரலாகும் புகைப்படங்கள்!

அதுமட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் ஷோலே 2 கம்மிங் என்று பதிவிட்டு, தோனியுடன் பழங்கால பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஞ்சி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரையில் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 12 போட்டிகளில் இந்தியாவும், 9 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் மோதியுள்ளன. ஒரு போட்டிக்கு எந்த முடிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் முதல் டி20 போட்டிக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கையில் இளநீருடன் டிரெஸ்ஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்த தோனி: ஜெர்சியில் கையெழுத்து வாங்கிய இஷான் கிஷான்!

Hockey World Cup 2023: ஜப்பானை கோலே அடிக்கவிடாமல் 8 கோல்களை அடித்து இந்தியா அபார வெற்றி

 

 

click me!