குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2 ஆவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடக்கும் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்த சீசனில் யுபி வாரியர்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 2 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது. இதுவரையில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இரு அணிகளும் இதுவரையில் 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், யுபி வாரியர்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் – தடுத்து நிறுத்திய யுபி வாரியர்ஸ் வீராங்கனை அலிசா ஹீலி!
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
ஹர்லீன் தியோல், பெத் மூனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), லாரா வோல்வார்ட், போஃபே லிட்ச்பீல்டு, ஆஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, கத்ரின் பிரைஸ், சினே ராணா, தனுஜா கன்வர், மன்னட் காஷ்யப், மேக்னா சிங்.
யுபி வாரியர்ஸ்:
அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர், கீப்பர்), கிரன் நவ்கிரே, சமாரி அதபட்டு, கிரேஸ் ஹாரிஸ், தீப்தி சர்மா, சுவேதா ஷெராவத், பூனம் கேம்னர், சைமா தாகூர், ஷோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கெய்க்வாட்.