அக்தரின் அதிவேக பந்து சாதனையை முறியடிப்பீர்களா..? உம்ரான் மாலிக்கின் பதில்

By karthikeyan VFirst Published Jan 2, 2023, 9:58 PM IST
Highlights

ஷோயப் அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை முறியடிப்பது குறித்து உம்ரான் மாலிக் கருத்து கூறியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்ற அணி பாகிஸ்தான். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத் கான் என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருக்கிறது.

இவர்களில் அக்தர் அதிவேகமாக வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடியவர். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரயன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் ஆகிய அந்த காலக்கட்டத்தின் தலைசிறந்த வீரர்களை தனது வேகத்தின் மூலம் மிரட்டிய பவுலர் அக்தர். 2003ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிக் நைட்டுக்கு அக்தர் 161.3 கிமீ வேகத்தில் வீசிய பந்துதான், சர்வதேச கிரிக்கெட்டின் அதிவேக பந்து.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடமில்லை..?

அந்த சாதனையை இன்னும் எந்த ஃபாஸ்ட் பவுலரும் முறியடிக்கவில்லை. இந்தியாவிலிருந்து சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள் வந்திருந்தாலும், அக்தர் மாதிரியான மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் இந்திய அணியில் இருந்ததில்லை. 

உம்ரான் மாலிக் தான் 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய இந்திய பவுலர். ஜம்மு காஷ்மீர் பவுலரான உம்ரான் மாலிக் 150 கிமீ வேகத்திற்கு வீசுகிறார். இந்தியாவிலிருந்து 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசும் பவுலரை கண்டு கிரிக்கெட் உலகமே வியந்தது. அவரை டி20 உலக கோப்பையில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான வலைப்பயிற்சியில் 163.7 கிமீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். அதே பந்தை போட்டியில் வீசியிருந்தார் அது வரலாற்று சாதனையாக இருந்திருக்கும். அந்தவகையில், அதேமாதிரியான பந்தை சர்வதேச போட்டியிலும் வீசி அக்தரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள உம்ரான் மாலிக்கிடம், அக்தரின் சாதனையை முறியடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உம்ரான் மாலிக், இப்போதைக்கு இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீச வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் இருக்கிறது. நான் நன்றாக வீசி, அதிர்ஷ்டமும் கைகொடுத்தால், அக்தரின் சாதனையை முறியடிக்கலாம். ஆனால் இதைப்பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. போட்டியில் பந்துவீசும்போது நாம் எவ்வளவு வேகத்தில் வீசுகிறோம் என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆட்டம் முடிந்தபின் தான் அதுகுறித்து நமக்கு தெரியவரும். களத்தில் பந்துவீசும்போது எனது முழுக்கவனமும் சரியான ஏரியாவில் பந்துவீசி விக்கெட் வீழ்த்தவேண்டும் என்பதில் மட்டுமே எனது கவனம் என்று உம்ரான் மாலிக் தெரிவித்துள்ளார்.
 

click me!