PAK vs NZ: டெவான் கான்வே அபார சதம்.. டாம் லேதம் அரைசதம்.. பெரிய ஸ்கோரை நோக்கி நியூசிலாந்து ஆட்டம்

By karthikeyan VFirst Published Jan 2, 2023, 6:43 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் அடித்துள்ளது.
 

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி, டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, அஜாஸ் படேல்.

இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஹர்திக் பாண்டியா..? இர்ஃபான் பதான் கடும் எச்சரிக்கை

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், ஹசன் அலி, நசீம் ஷா, மிர் ஹம்ஸா, அப்ரார் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 134 ரன்களை குவித்தனர். 71 ரன்களில் டாம் லேதம் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய டெவான் கான்வே சதமடித்தார். டெவான் கான்வே 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கு பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்த 20 வீரர்கள் இவர்கள் தான்..! நீங்க கிளம்புங்க தவான்

அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 36 ரன்களும், ஹென்ரி நிகோல்ஸ் 26 ரன்களும் அடித்தனர். டேரைல் மிட்செல்(3) மற்றும் பிரேஸ்வெல் (0) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் டாம் பிளண்டெலும் இஷ் சோதியும் இணைந்து ஆடிவருகின்றனர். முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் அடித்துள்ளது நியூசிலாந்து அணி. டாம் பிளண்டெல் 30 ரன்களுடனும், இஷ் சோதி 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

click me!