BBL: கிறிஸ் லின் அதிரடி அரைசதம்..! ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்

By karthikeyan VFirst Published Jan 2, 2023, 3:37 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்களை குவித்து 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஹோபர்ட்டில் நடந்துவரும் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

ஹென்ரி ஹண்ட், மேத்யூ ஷார்ட், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகார், ஹாரி கான்வே, பீட்டர் சிடில் (கேப்டன்).

இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

டார்ஷி ஷார்ட், பென் மெக்டெர்மோட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), காலெப் ஜுவெல், டிம்  டேவிட், ஆசிஃப் அலி, மிட்செல் ஓவன், ஃபஹீம் அஷ்ரஃப், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹென்ரி ஹண்ட் 10 பந்தில் 3 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 26 பந்தில் 38 ரன்கள் அடித்தார். ஆடம் ஹோஸ் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கிறிஸ் லின், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார்.

2023 ஒருநாள் உலக கோப்பைக்கு 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்தது பிசிசிஐ..! விவிஎஸ் லக்‌ஷ்மணுக்கு கூடுதல் டாஸ்க்

காலின் டி கிராண்ட் ஹோமும் அடித்து ஆடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கிறிஸ் லின் சதத்தை நெருங்கிய நிலையில், 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 58 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். கிறிஸ் லின்னின் அதிரடி அரைசதம் மற்றும் டி கிராண்ட் ஹோம், மேத்யூ ஷார்ட்டின் பங்களிப்பால் 20 ஓவரில் 177 ரன்களை குவித்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி, 178 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!