BBL: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை அசால்ட்டா அடித்து காலி செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

By karthikeyan VFirst Published Jan 2, 2023, 5:12 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. ஹோபர்ட்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

ஹென்ரி ஹண்ட், மேத்யூ ஷார்ட், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகார், ஹாரி கான்வே, பீட்டர் சிடில் (கேப்டன்).

2023 ஒருநாள் உலக கோப்பைக்கு பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்த 20 வீரர்கள் இவர்கள் தான்..! நீங்க கிளம்புங்க தவான்

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

டார்ஷி ஷார்ட், பென் மெக்டெர்மோட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), காலெப் ஜுவெல், டிம்  டேவிட், ஆசிஃப் அலி, மிட்செல் ஓவன், ஃபஹீம் அஷ்ரஃப், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹென்ரி ஹண்ட் 10 பந்தில் 3 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் 26 பந்தில் 38 ரன்கள் அடித்தார். ஆடம் ஹோஸ் 5 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய கிறிஸ் லின், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். சதத்தை நெருங்கிய லின் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 58 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்தார். காலின் டி கிராண்ட் ஹோம் 18 பந்தில் 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 177 ரன்களை குவித்தது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி.

இனிமேல் ஐபிஎல்லில் ஆடிட்டு இளம் வீரர்கள் இந்திய அணிக்குள் ஈசியா வந்துர முடியாது..! கடிவாளம் போட்ட பிசிசிஐ

178 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜுவெல் மற்றும் மெக்டெர்மோட் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஜுவெல் 28 பந்தில் 54 ரன்களும், மெக்டெர்மோட் 33 பந்தில் 53 ரன்களும் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதன்பின்னர் டார்ஷி ஷார்ட் மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவருமே அடித்து ஆடி தலா 27 ரன்கள் அடிக்க, 18வது ஓவரிலேயே 178 ரன்கள் என்ற இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

click me!