இனி நோபாலில் பேட்ஸ்மேனுக்கு ரன் – ஐசிசியின் புதிய விதிமுறைகள் ஜூன் 1ல் அமல்!

By Rsiva kumar  |  First Published May 16, 2023, 4:25 PM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.


ஐசிசி விதிமுறைகளின் படியில் இதுவரையில் வைடோ, நோபோலோ, ஓவர் த்ரோவோ எதுவாக இருந்தாலும் அது எக்ஸ்டிராவில் தான் சேரும். உடலில் எங்கு பட்டு பந்து சென்றாலும் சரி, வைடு மற்றும் நோபால் ஆகியவற்றிற்கு எக்ஸ்டிராவில் தான் ரன்கள் சேரும். இனிமேல் நோபால் பேட்ஸ்மேனுக்கு ரன்னாக சேரும்.

லக்னோவை வீழ்த்தி 2ஆவது இடம் பிடிக்குமா மும்பை? சென்னையின் நிலைமை?

மேலும், கேட்ச் பிடிக்கும் போதோ, ரன் அவுட்டிற்கோ சந்தேகத்தின் அடிப்படையில் கள நடுவர்கள் மூன்றாம் நடுவருக்கு பரிந்துரைக்கும் போது சாப்ட் சிகனல் முறையில் அவுட் கொடுப்பார்கள். இனிமேல், அப்படி வழங்க தேவையில்லை.

Tap to resize

Latest Videos

பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து, 2ஆவது அணியாக வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

நோபால் ப்ரீ ஹிட்டில் ஸ்டெம்பில் பந்து பட்டு சென்றால், அதில் எடுக்கப்படும் ரன்கள் இனி பேட்ஸ்மேன் கணக்கில் தான் சேர்க்கப்படும்.

முகமது ஷமி, மோகித் சர்மா வேகத்தில் சிக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற GT!

மேலும், கிரிக்கெட்டில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 3ஆவது விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்தை வீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனும், அவருக்கு அருகில் நிற்க வைக்கப்படும் பீல்டரும், ஸ்டெம்பிக்ற்கு அருகில் நிற்கும் விக்கெட் கீப்பரும் சரி கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வாய்ப்பு அதிகம்? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?

click me!