IPL 2023: நீயா நானா போட்டியில் மும்பை - லக்னோ பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 16, 2023, 3:06 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. 18 புள்ளிகளுடன் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேறியது.

12 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறும். 12 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸும், 12 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 13 புள்ளிகளை பெற்று 4ம் இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

Tap to resize

Latest Videos

IPL 2023: பையன் பட்டைய கிளப்புறான்.. சிஎஸ்கே பேட்ஸ்மேனுக்கு புகழாரம் சூட்டிய கேப்டன் தோனி

பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க இரு அணிகளுமே கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் மோதுகின்றன. லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)

குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணல் பாண்டியா (கேப்டன்), ஆயுஷ் பதோனி, கிருஷ்ணப்பா கௌதம், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான்.

IPL 2023: ஐபிஎல்லில் அதிக டக் அவுட்.. ரோஹித் சர்மாவின் மோசமான சாதனையை சமன் செய்த தினேஷ் கார்த்திக்

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நெஹல் வதேரா, டிம் டேவிட், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
 

click me!