BAN vs IND: 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ், அஷ்வின் அபார பவுலிங்! வங்கதேசத்தை சொற்ப ரன்களுக்கு சுருட்டிய இந்தியா

By karthikeyan VFirst Published Dec 22, 2022, 3:49 PM IST
Highlights

2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 227 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
 

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்த போட்டியிலும் காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் தான் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத் ஆடுகிறார். 2010ம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட்டில் ஆடிய ஜெய்தேவ் உனாத்கத், அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த டெஸ்ட்டில் தான் ஆடுகிறார். 12  ஆண்டுகளுக்கு பிறகு தனது 2வது டெஸ்ட்டில் ஆடுகிறார் உனாத்கத்.

கிலியன் எம்பாப்பே ஃபிட்னெஸ் ரகசியம்.. டயட் & ஒர்க் அவுட் விவரம்..! நீங்களும் தெரிந்துகொண்டு ஃபிட் ஆகுங்க

இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, ஜாகிர் ஹசன், மோமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்ஃபிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ், டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, டஸ்கின் அகமது.

முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச பேட்டிங் ஆர்டர், உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரது பவுலிங்கில் சரிந்தது. வங்கதேச அணியில் மோமினுல் ஹக் மட்டுமே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். சிறப்பாக ஆடிய மோமினுல் ஹக் 84 ரன்கள் அடித்தார். 12 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஜெய்தேவ் உனாத்கத், ஜாகிர் ஹசன் (15), முஷ்ஃபிகு ரஹிம் (26) ஆகிய இருவரையும் வீழ்த்தினார்.

அபாரமாக பந்துவீசிய ஃபாஸ்ட் பவுலர் உமேஷ் யாதவ், ஷகிப் அல் ஹசன்(16), மெஹிடி ஹசன்(15), நூருல் ஹசன்(6), டஸ்கின் அகமது ஆகிய நால்வரையும் வீழ்த்த, அபாரமாக பேட்டிங் ஆடி 84 ரன்களை குவித்த மோமினுல் ஹக்கை அஷ்வின் வீழ்த்த, முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வங்கதேச அணி.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக கோப்பை.. வருவாயை கண்டு பேராசை அடைந்த ஃபிஃபா தலைவர்..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 4 விக்கெட் வீழ்த்தினர். உனாத்கத் 2 விக்கெட் வீழ்த்தினார். 
 

click me!