India Predicted XI vs Bangladesh Dhaka Test: வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: ஆடும் உத்தேச இந்திய அணி!

By Rsiva kumarFirst Published Dec 21, 2022, 6:36 PM IST
Highlights

நாளை நடக்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவிற்குப் பதிலாக ஜெய்தேவ் உனட்கட்டிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதையடுத்து, 2 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2ஆவது இடத்திற்கு முன்னேறியது. இந்த நிலையில், நாளை தாகாவில் நடக்க உள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் இது தான்.

சென்னைக்கு வந்த ஹாக்கி தொடருக்கான உலகக்கோப்பை - முதல்வர் வாழ்த்து

முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா, சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். விராட் கோலி, ஷ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடுகின்றனர். முதல் 6 இடங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே போன்று அக்‌ஷர் படேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் 7 ஆவது மற்றும் 8ஆவது விக்கெட்டுக்கு தங்களது பங்களிப்பை கொடுக்கின்றனர். தற்போது 10 மற்றும் 11ஆவது இடங்களில் தான் மாற்றம் தேவைப்படுகிறது. முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். குல்தீப் யாதவ் தனது பங்கிற்கு 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

விராட் கோலிக்கு கேட்சை விட்டால் ஆட்டம் குளோஸ் - வங்கதேச அணியின் பயிற்சியாளர் எச்சரிக்கை!

இறுதியாக உமேஷ் யாதவிற்குப் பதிலாக ஜெய்தேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. விஜய் ஹசாரே டிராபியில் சௌராஷ்டிரா அணியை வழிநடத்தி டைட்டில் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆகையால், அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், உமேஷ் யாதவ் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதாலும், பேட்டிங்கும் விளையாடுவார் என்பதாலும் இறுதியாக யாருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நாளைக்கு தான் தெரியவரும்.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் ரேங்கிங் பட்டியலில் முன்னேறிய சுப்மன் கில், புஜாரா, ஷ்ரேயாஷ் ஐயர்!

தொடக்க வீரர்கள்: சுப்மன் கில், கே எல் ராகுல் (கேப்டன்)
மிடில் ஆர்டர்ஸ்: புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்
விக்கெட் கீப்பர்: ரிஷப் பந்த்
ஸ்பின்னர்ஸ்: அக்‌ஷர் படேல், அஸ்வின், குல்தீப் யாதவ், 
வேகப்பந்து வீச்சாளர்கள்: முகமது சிராஜ், உமேஷ் யாதவ் அல்லது ஜெய்தேவ் உனட்கட்

click me!