
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மிக பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரான ஜூன் 4 ஆம் தேதி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த டி20 உலகக் கோப்பை போட்டிகள் 10 மைதானங்களில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன. ஆதலால், இந்த இரு அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன.
இது தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று 8 அணிகள் முந்தைய டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து தகுதி பெற்றுவிட்டன. மேலும், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகள் தகுதிக்கு முந்தைய அணிகளுக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் டாப் இடங்களைப் பிடித்துள்ளன.
எஞ்சிய 5 இடங்கள் ரிஜினல் குவாலிஃபையர்ஸ்களாக இடம் பெறும். இது தவிர ஆசியாவிலிருந்து 2, ஆப்பிரிக்காவிலிருந்து 2, அமெரிக்காவிலிருந்து ஒன்று என்று அணிகள் இடம் பெறும். இதில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை பிராந்திய தகுதிச் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றதன் மூலம் டி20 உலகக் கோப்பைத் தகுதியைப் பெற்றன. மற்றொரு குவாலிஃபையர் போட்டியில் கிழக்கு ஆசிய பசிபிக் அணியை வீழ்த்தி பப்புவா நியூ கினியா அணி டி20 உலகக் கோப்பைக்கான தகுதி பெற்றது.
இந்த நிலையில், முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கு உகாண்டா தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ருவாண்டாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்பிரிக்கா தகுதி சுற்றில் முதல் 2 இடங்களை பிடித்ததன் மூலமாக உகாண்டா தகுதி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகள்:
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நமீபியா, நேபாள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, அமெரிக்கா.