U19 Womens T20 World Cup: ஷ்வேதா செராவத் அபார பேட்டிங்! தென்னாப்பிரிக்காவை அசால்ட்டா அடித்து காலிசெய்த இந்தியா

By karthikeyan VFirst Published Jan 14, 2023, 8:56 PM IST
Highlights

அண்டர் 19 மகளிர் டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

அண்டர் 19 மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இன்று நடந்த போட்டியில் இந்திய அண்டர் 19 மகளிர் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அண்டர் 19 மகளிர் அணி:

ஷ்வேதா செராவத், ஷஃபாலி வெர்மா (கேப்டன்), கொங்காடி த்ரிஷா, சௌமியா திவாரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சோனியா மெந்தியா, ரிஷிதா பாசு, அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, ஷப்னம் எம்டி, சோனம் யாதவ்.

IND vs SL: கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை சைமன் லூரன்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 44 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 61 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டர் வீராங்கனை மேடிசன் லேண்ட்ஸ்மேன் அதிரடியாக ஆடி 17 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை விளாச, 20 ஓவரில் 166 ரன்கள் அடித்தது தென்னாப்பிரிக்க அண்டர் 19 மகளிர் அணி.

167 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அண்டர் 19 அணியின் கேப்டன் ஷஃபாலி வெர்மா, 16 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 45 ரன்களை குவித்தார். கொங்காடி திரிஷா 15 ரன்களும், சௌமியா திவாரி 10 ரன்களும் அடித்தனர். ஒருமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடிய தொடக்க வீராங்கனை ஷ்வேதா செராவத் அரைசதம் அடித்தார். அதன்பின்னரும் பொறுப்புடனும் அதேவேளையில் அதிரடியாகவும் பேட்டிங் ஆடி 57 பந்தில் 20 பவுண்டரிகளுடன் 92 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்

ஷ்வேதாவின் அபாரமான பேட்டிங்கால் 17வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!