எல்லோராலயும் விராட் கோலியாக முடியுமா? மும்பை இந்தியன்ஸ் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்!

By Rsiva kumar  |  First Published Apr 23, 2023, 3:53 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார், ஆனால், மும்பை இந்தியன்ஸ் வீரர்களால் 3 ஓவர்களில் 38 ரன்கள் எடுக்க முடியவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் கடைசி வரை அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. பின்னர், கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷான் 1 ரன்னில் வெளியேறினார்.

IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!

MI failed to chase 38 in 3 overs.

Meanwhile Virat Kohli against pak chased 48 in last 3 overs. pic.twitter.com/WodytysZNC

— leisha (@katyxkohli17)

Tap to resize

Latest Videos

 

'Everyone can't be Virat Kohli'
- Harsha Bhogle in his crying voice pic.twitter.com/cGXtQV6Kbx

— Virat⁷⁵ 🇮🇳 (@virat_anushka)

 

அடுத்து வந்த கேமரூன் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மும்பை வெற்றிக்கு 3 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கை வசம் 7 விக்கெட் இருந்தது. 18ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில், 9 ரன் எடுக்கப்பட்டது. அதோடு சூர்யகுமார் யாதவ்வும் ஆட்டமிழந்தார். அதன் பிறகு 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை நாதன் எல்லிஸ் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசியாக 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 

அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இதில், முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவது பந்தில் ரன் இல்லை. 3ஆவது பந்தில் திலக் வர்மா போல்டானார். 4ஆவது பந்தில் இம்பேக்ட் பிளேயராக வதேரா களமிறங்கினார். அவரும் போல்டாகி வெளியேறினார். அதன் பிறகு ஆர்ச்சர் வந்தார். 5ஆவது பந்தில் ரன் எடுக்கப்படாத நிலையில், 6ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சட்டத்தை மீறினால் நடவடிக்க; ஸ்டெம்பை உடைச்சா அல்ல; மும்பை போலீஸை வம்புக்கு இழுத்த பஞ்சாப் கிங்ஸ்!

இந்த நிலையில் தான் வெற்றி பெற வேண்டிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சொதப்பிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை விராட் கோலியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி ஆடினார். 

IPL 2023: ஆட்டநாயகனுக்குரிய தகுதி அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் இருந்தது: சாம் கரண் ஓபன் டாக்!

கடைசியாக கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலியுடன், ஹர்திக் பாண்டியா இருந்தார். ஆனால், பாண்டியா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் வந்தார். அவர் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் வந்தார். கடைசியாக இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி 53 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் வீரர்களை விராட் கோலியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

 

MI failed to chase 38 in 3 overs.

Meanwhile Virat Kohli against pak chased 48 in last 3 overs. pic.twitter.com/WodytysZNC

— leisha (@katyxkohli17)

 

click me!