IPL 2023: RCB vs RR டாஸ் ரிப்போர்ட்..! வெளிநாட்டு வீரரை அதிரடியாக மாற்றிய ஆர்சிபி அணி

By karthikeyan V  |  First Published Apr 23, 2023, 3:34 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகின்றன.

இந்நிலையில் இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் வலுவான 2 அணிகளான ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியிலும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடுவதால், விராட் கோலி தான் கேப்டன்சி செய்கிறார். 

Tap to resize

Latest Videos

IPL 2023: கேகேஆரை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணியில் அவங்க 2 பேரில் யாருக்கு இடம்..? CSK- KKR அணிகளின் உத்தேச லெவன்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது. ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வைன் பார்னெலுக்கு பதிலாக டேவிட் வில்லி ஆடுகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

IPL 2023: நீயெல்லாம் (வார்னர்) இனிமேல் ஐபிஎல்லில் ஆட வராத..! சேவாக்கின் விமர்சனத்துக்கு வார்னரின் பதில்

ஆர்சிபி அணி:

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டுப்ளெசிஸ், மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.
 

click me!