சட்டத்தை மீறினால் நடவடிக்க; ஸ்டெம்பை உடைச்சா அல்ல; மும்பை போலீஸை வம்புக்கு இழுத்த பஞ்சாப் கிங்ஸ்!

By Rsiva kumar  |  First Published Apr 23, 2023, 2:30 PM IST

மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் கடைசி ஓவரில் அர்ஷ்திப் சிங் 2 முறை யார்க்கர் வீசி மிடில் ஸ்டெம்புகளை உடைத்தது தொடர்பாக மும்பை போலீஸை, பஞ்சாப் கிங்ஸ் வம்புக்கு இழுத்துள்ளது.


ஐபிஎல் 2023 தொடரின் 31ஆவது போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒவ்வொருவரும் கடைசி வரை அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்ரீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார்.

IPL 2023: ஆட்டநாயகனுக்குரிய தகுதி அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் இருந்தது: சாம் கரண் ஓபன் டாக்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.

IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார். ஆனால், அப்போது மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.

IPL 2023: வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின்!
 

Like Addhar for Indian citizens, trophy is mandatory for IPL franchise to report a FIR. https://t.co/Ra2WY4RywD

— Mumbai Police (@MumbaiPolicee)

 

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் மும்பை போலீஸை பஞ்சாப் கிங்ஸ் வம்புக்கு இழுத்துள்ளது. அதாவது, அர்ஷ்தீப் சிங் யார்க்கர் வீசி மிடில் ஸ்டெம்பை உடைத்தார். இதை வைத்து ஹாய் மும்பை போலீஸ், நாங்கள் ஒரு குற்றத்தைப் புகாரளிக்க விரும்பினோம் என்று பஞ்சாப் கிங்ஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இதற்கு பதிலளித்த மும்பை போலீஸ் சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்டம்புகள் அல்ல என்று பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Hey , we'd like to report a crime. 👀 pic.twitter.com/x9FVPbxHzy

— Punjab Kings (@PunjabKingsIPL)

 

click me!