IPL 2023: ஐபிஎல்லின் முதல் இம்பேக்ட் பிளேயர் துஷார் தேஷ்பாண்டே..! வரலாற்றில் இடம்பிடித்து சாதனை

By karthikeyan VFirst Published Mar 31, 2023, 11:05 PM IST
Highlights

ஐபிஎல்லில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் முதல் இம்பேக்ட் பிளேயராக இறக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை துஷார் தேஷ்பாண்டே படைத்தார்.
 

ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆடும் லெவனுடன் சேர்த்து கூடுதல் வீரராக இம்பேக்ட் பிளேயர் என்று ஒருவரை எடுத்துக்கொள்ளலாம். அந்த வீரரை ஆட்டத்தின் போக்கை பொறுத்து ஆட்டத்தின் இடையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்தவகையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோஹித் சர்மா, அபினவ் மனோகர், கேஎஸ் பரத் ஆகிய 5 வீரர்களில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்திக்கொள்வதாக டாஸிற்கு பின் தெரிவித்தது.  சிஎஸ்கே அணி, துஷார் தேஷ்பாண்டே, சேனாபதி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகிய ஐவரின் பெயரையும் சமர்ப்பித்தது. 

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப்.

சிஎஸ்கே அணி: 

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே அதிரடியாக பேட்டிங் ஆடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தார். 8 ரன்னில் சதத்தை தவறவிட்டார் ருதுராஜ் கெய்க்வாட். அவரைத்தவிர மற்ற அனைவருமே பேட்டிங்கில் சொதப்பினர். ருதுராஜின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 178 ரன்களை குவித்த சிஎஸ்கே அணி, 179 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

179 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி விரட்டிவருகிறது. 2வது இன்னிங்ஸில் அம்பாதி ராயுடுவை பென்ச்சில் உட்காரவைத்துவிட்டு, இம்பேக்ட் பிளேயராக கூடுதல் பவுலராக துஷார் தேஷ்பாண்டேவை களமிறக்கியது சிஎஸ்கே அணி. இதன்மூலம் ஐபிஎல்லில் இம்பேக்ட் பிளேயராக ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை துஷார் தேஷ்பாண்டே படைத்தார்.

IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்

அவரைத்தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி கேன் வில்லியம்சனை 3ம் வரிசையில் இறக்காமல் சாய் சுதர்சனை இம்பேக்ட் பிளேயராக இறக்கிவிட்டது. அவர் எந்த இம்பேக்ட்டையும் ஏற்படுத்தாமல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
 

click me!