நான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான பேட்ஸ்மேன்கள் இவங்கதான்..! டிரெண்ட் போல்ட் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Sep 12, 2021, 6:21 PM IST
Highlights

நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலரான டிரெண்ட் போல்ட், அவர் பந்துவீசியதில் யார் கடினமான பேட்ஸ்மேன்கள் என்று கூறியுள்ளார்.
 

சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் நியூசிலாந்தின் இடது கை ஃபாஸ்ட் பவுலர் டிரெண்ட் போல்ட். 2011ம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து அணியில் ஆடிவரும் டிரெண்ட் போல்ட், 73 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 292 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

93 ஒருநாள் போட்டிகளில் 169 விக்கெட்டுகளையும், 34 டி20 போட்டிகளில் ஆடி 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 737 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

3 விதமான போட்டிகளிலும் நியூசிலாந்தின் நட்சத்திர பவுலராக ஜொலிக்கும் டிரெண்ட் போல்ட், சமகாலத்தின் சிறந்த பவுலர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். 2020 ஐபிஎல்லில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் டிரெண்ட் போல்ட், 2020 சீசனில் மும்பை அணி கோப்பையை 5வது முறையாக வென்றபோது அந்த அணியில் முக்கிய பங்காற்றினார்.

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆட தயாராகிவரும் டிரெண்ட் போல்ட், தனது கெரியரில் இதுவரை தான் பந்துவீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய மூவரும் தான் என்று கூறியுள்ளார்.

கிறிஸ் கெய்லுக்கு பந்துவீச எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதேவேளையில் அவருக்கு பந்துவீசுவது மிகக்கடினம். ரோஹித் சர்மா அபாயகரமான பேட்ஸ்மேன். கேஎல் ராகுலும் அருமையான வீரர் என்று டிரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.
 

click me!