#T20WorldCup தோனியை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு..? அஜய் ஜடேஜா அதிரடி

By karthikeyan VFirst Published Sep 12, 2021, 5:12 PM IST
Highlights

இந்திய அணி திடீரென தோனியை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று அஜய் ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 2007ல் முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன் தோனி. 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை வென்றவர் தோனி. எனவே அவரது அனுபவம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு வெகுவாக பயன்படும் என்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது அனுபவமும், நெருக்கடியான சூழ்நிலைகளை நிதானமாக கையாள்பவர் என்பதால் அவரது மனநிலையும் இந்திய அணிக்கு பயன்படும் என்பதால் தான்  அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தோனி நியமனம் குறித்து பேசியுள்ள அஜய் ஜடேஜா, தோனியின் மிகப்பெரிய ரசிகன் நான். தான் கேப்டனாக இருக்கும்போதே, அடுத்த கேப்டனை நியமித்துவிட்டு ஒதுங்கியவர் தோனி மட்டுமே. ஆனால் திடீரென தோனி ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இந்திய அணியின் பயிற்சியாளர் உலகின் நம்பர் 1 அணியாக உருவாக்கியுள்ளார். அப்படியிருக்கையில், ஓவர்நைட்டில் தோனியை ஆலோசகராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் தெரியவில்லை. அது எனக்கு சர்ப்ரைஸாக உள்ளது என்றார் அஜய் ஜடேஜா.
 

click me!