மொத்த இங்கிலாந்தும் திறந்துதான் கிடக்கு.. எப்ப வேணா என்ன வேணா நடந்திருக்கலாம்! கோவிட் குறித்து சாஸ்திரி தடாலடி

By karthikeyan VFirst Published Sep 12, 2021, 4:44 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மௌனம் கலைத்துள்ளார்.
 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் கடைசி டெஸ்ட் ரத்தானது.

4வது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் ஃபிசியோ நிதின் படேல் ஆகிய நால்வருக்கும் கொரோனா உறுதியானது. அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகிய பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன் கோலி உள்ளிட்ட சில வீரர்கள் கலந்துகொண்டதுதான் கொரோனா பரவலுக்கு காரணம் என்று கூறப்பட்டது. 

கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணியை சேர்ந்த மேலும் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதால் தான் இந்திய அணியில் கொரோனா பரவியது என்று கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து பேசியுள்ள ரவி சாஸ்திரி, ஒட்டுமொத்த இங்கிலாந்தும் திறந்துதான் இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய அணி மட்டும்தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. இங்கிருக்கும் எக்ஸ்பர்ட்டுகளிடம் கேளுங்கள் என்று ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
 

click me!