#CPL2021 எவின் லூயிஸின் காட்டடி சதத்தால் சவாலான இலக்கை சர்வ சாதாரணமா அடித்த பாட்ரியாட்ஸ் அணி

By karthikeyan VFirst Published Sep 12, 2021, 2:48 PM IST
Highlights

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் எவின் லூயிஸின் காட்டடி சதத்தால் 160 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தி செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

கரீபியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற பாட்ரியாட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நைட் ரைடர்ஸ் அணி, காலின் முன்ரோவின் அதிரடியான பேட்டிங்(47 ரன்கள்) மற்றும் கடைசி நேர சுனில் நரைனின் அதிரடி(18 பந்தில் 33 ரன்கள்) ஆகியவற்றால் 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது. கேப்டன் பொல்லார்டு(15), டிம் சேஃபெர்ட்(1) ஆகியோர் சொதப்பியதால் நைட் ரைடர்ஸ் அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

இதையடுத்து 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பாட்ரியாட்ஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடி அதிவேகமாக ஸ்கோர் செய்தார். சிக்ஸர் மழை பொழிந்த எவின் லூயிஸ், சதமடித்து அசத்தினார்.

52 பந்தில் 5 பவுண்டரிகள் மட்டும் அடித்த லூயிஸ், 11 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். 52 பந்தில் 102 ரன்களை குவித்த எவின் லூயிஸ், 15வது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார். லூயிஸின் காட்டடி சதத்தால் 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாட்ரியாட்ஸ் அணி.
 

click me!