#IPL2021 ஐபிஎல்லில் இருந்து விலகிய 3 இங்கிலாந்து வீரர்கள்..!

Published : Sep 11, 2021, 10:08 PM IST
#IPL2021 ஐபிஎல்லில் இருந்து விலகிய 3 இங்கிலாந்து வீரர்கள்..!

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனில் இருந்து 3 இங்கிலாந்து வீரர்கள் விலகியுள்ளனர்.  

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்கி நடக்கவுள்ளன. அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

ஐபிஎல் 14வது சீசனை தொடர்ந்து டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கு தயாராகும் விதமாக, ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகினர். சில வீரர்கள் காயம் காரணமாக விலகினர். அப்படியாக விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை அணிகள் அறிவித்துவருகின்றன.

இங்கிலாந்து வீரர்களான ஆர்ச்சர் காயத்தால் விலகிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வு எடுத்து சென்றுள்ளார். பட்லரும் ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகினார்.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), கிறிஸ் வோக்ஸ்(டெல்லி கேபிடள்ஸ்) மற்றும் டேவிட் மலான்(பஞ்சாப் கிங்ஸ்) ஆகிய 3 வீரர்களும் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!