தென்னாப்பிரிக்க அணி புறக்கணித்த ஆத்திரத்தை கரீபியன் பிரீமியர் லீக்கில் காட்டிய டுப்ளெசிஸ்.. செம பேட்டிங்

By karthikeyan VFirst Published Sep 11, 2021, 9:37 PM IST
Highlights

கரீபியன் பிரீமியர் லீக்கில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி 84 ரன்களை குவித்தார் டுப்ளெசிஸ். அவரது அதிரடியால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

விறுவிறுப்பாக நடந்துவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃப்ளெட்சர்(0), தியால்(8) ஆகிய இருவரும் மோசமாக ஆடினர். முதல் ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட லூசியா கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஆரம்பம் முதலே அடித்து ஆடினார்.

டுப்ளெசிஸ் ஒருமுனையில் அதிரடியாக அடித்து ஆட, மறுமுனையில்  ரோஸ்டான் சேஸ்(0), டேவிட் வீஸ்(17) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம் கிடைக்காத டுப்ளெசிஸ், தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆடியது போன்று இருந்தது அவரது பேட்டிங்.

பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடி அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 54 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 84 ரன்களை குவித்து 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 176 ரன்கள் என்ற இலக்கை பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!