ஐபிஎல்லில் இருந்து விலகிய இங்கி., வீரருக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்

Published : Sep 11, 2021, 08:07 PM IST
ஐபிஎல்லில் இருந்து விலகிய இங்கி., வீரருக்கு மாற்றாக தென்னாப்பிரிக்க வீரரை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் டேவிட் மலானுக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்க்ரமை ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.  

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள்  வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகின்றன. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

சில வெளிநாட்டு வீரர்கள், ஐபிஎல் எஞ்சிய போட்டிகளில் ஆடாதது சில அணிகளுக்கு பாதிப்பாக அமையும். அந்தவகையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிவந்த ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்கள் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினர்.

எனவே அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் நேதன் எல்லிஸையும், இங்கிலாந்து ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத்தையும் அணியில் எடுத்துள்ளது. இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய ஜெய் ரிச்சர்ட்ஸனுக்கு மாற்று வீரராக அடில் ரஷீத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆடிய ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்க்ரமை ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!