SRHக்காக ஐபிஎல் சரித்திரத்தை மாற்றி அமைத்த டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்!

By Rsiva kumar  |  First Published Mar 27, 2024, 10:51 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 8ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் ஹென்ரிச் கிளாசென் அதிரடியால் 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.


ஹைதராபாத் அணியின் ஹோம் மைதானமான ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 8ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

புதிய வரலாறு படைத்த SRH – 277 ரன்கள் குவித்து சாதனை – கண்ணீர்விட்டு அழாத குறையா அடிவாங்கிய MI!

Tap to resize

Latest Videos

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்தது. இதில், மாயங்க் அகர்வால் மட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். மாறி மாறி பவுண்டரியும், சிக்சருமாக விளாசினர். இதில், ஹெட் 18 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

18, 16 பந்துகளில் போட்டி போட்டு அரைசதம் - மும்பை இந்தியன்ஸ் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்த ஹெட், அபிஷேக் சர்மா!

இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து 62 மற்றும் 63 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் பாதி ஆட்டத்தில் இவர்கள் சாம்பியன் என்றால், அடுத்த பாதி ஆட்டத்தை எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் தங்களது வசப்படுத்திக் கொண்டனர். பந்தே நார் நாராக கிழியும் அளவிற்கு சரமாரியாக வெடித்தனர்.

ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவைத் தொடர்ந்து கிளாசென் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். முதல் 10 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த 10 ஓவர்களில் ஹென்ரிச் கிளாசென் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 129 ரன்கள் குவித்தது. இறுதியாக கிளாசென் 80 ரன்கள் எடுக்க ஹைதராபாத் அணியானது 277 ரன்கள் எடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது.

கோலி காலில் விழுந்தது குத்தமா? ரசிகரை தனியா அழைத்துச் சென்று கும்மாங்குத்து குத்திய ஊழியர்கள்: வீடியோ வைரல்!

இதற்கு முன்னதாக ஆர்சிபி எடுத்திருந்த 263/5 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. போட்டியின் கடைசி ஓவரில் இந்த சாதனையை முறியடித்து ஹைதராபாத் புதிய அதிகபட்ச ஸ்கோராக 277 ரன்களை பதிவு செய்தது.

click me!