புதிய வரலாறு படைத்த SRH – 277 ரன்கள் குவித்து சாதனை – கண்ணீர்விட்டு அழாத குறையா அடிவாங்கிய MI!

By Rsiva kumarFirst Published Mar 27, 2024, 9:47 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 8ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக 277 ரன்களை பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 8ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இது ஹைதராபாத்தின் ஹோம் மைதானம் என்பதால், அந்த அணி ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.

18, 16 பந்துகளில் போட்டி போட்டு அரைசதம் - மும்பை இந்தியன்ஸ் அஸ்திவாரத்தை ஆட்டி வைத்த ஹெட், அபிஷேக் சர்மா!

இந்த போட்டியின் மூலமாக டிராவிஸ் ஹெட் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதில் மாயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்து சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 52 ரன்கள் எடுக்க, அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

கோலி காலில் விழுந்தது குத்தமா? ரசிகரை தனியா அழைத்துச் சென்று கும்மாங்குத்து குத்திய ஊழியர்கள்: வீடியோ வைரல்!

பின்னர், ஹெட் 24 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 62 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்சர் உள்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் இணைந்து பந்தை நார் நாராக கிழித்தனர். மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் யாரையும் விட்டு வைக்கப்படவில்லை. பும்ரா மட்டும் இதில் விதிவிலக்கு. இந்தப் போட்டியில் அறிமுகமான குவெனா மபகா, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஷாம்ஸ் முலானி, ஹர்திக் பாண்டியா என்று ஒவ்வொரையும் விட்டு வைக்காமல் சரமாரியாக விளாசினர்.

Rohit 200th IPL: தோனி, கோலி 200 ஐபிஎல் போட்டி சாதனை பட்டியலில் இணைந்த ரோகித் சர்மா – சச்சின் கொடுத்த கௌரவம்!

ஹென்ரிச் கிளாசென் தன் பங்கிற்கு 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளாசென் 34 பந்துகளில் 4 பவுண்டரி,7 சிக்சர் உள்பட 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று மார்க்ரம் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு ஆர்சிபி அடித்த 263/5 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.

SRH vs MI போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லையா? ஃபிட்னெஸ்க்கு அனுமதி மறுப்பு!

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:

277/3 - SRH vs MI, ஹைதராபாத், 2024

263/5 - RCB vs PWI, பெங்களூரு, 2013

257/5 - LSG vs PBKS, மொகாலி, 2023

248/3 - RCB vs GL, பெங்களூரு, 2016

246/5 - CSK vs RR, சென்னை, 2010

பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த SRH,

81/1 vs MI, ஹைதராபாத், 2024

79/0 vs KKR, ஹைதராபாத், 2017

77/0 vs PBKS, ஹைதராபாத், 2019

77/0 vs DC, துபாய், 2020.

அதிவேகமாக ஐபிஎல் அரைசதம் vs MI (பந்துகள்)

14 – பேட் கம்மின்ஸ் (KKR) - புனே, 2022

18 – ரிஷப் பண்ட் (DC) – மும்பை, வான்கடே ஸ்டேடியம், 2018

18 – டிராவிஸ் ஹெட் (SRH) – ஹைதராபாத், 2024

19 – அஜின்க்யா ரஹானே (CSK) - மும்பை, வான்கடே ஸ்டேடியம், 2023

அதிவேகமாக IPL SRH அணிக்காக அரைசதங்கள் (பந்துகள்)

16 – அபிஷேக் சர்மா vs MI, ஹைதராபாத், 2024

18 – டிராவிஸ் ஹெட் vs MI, ஹைதராபாத், 2024

20 – டேவிட் வார்னர் vs CSK, ஹைதராபாத், 2015

20 – டேவிட் வார்னர் vs KKR, ஹைதராபாத், 2017

20 – மொயீசஸ் ஹென்ரிக்ஸ் vs RCB, ஹைதராபாத், 2015

21 – டேவிட் வார்னர் vs RCB, பெங்களூரு, 2016

click me!