டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசனின் இறுதிப் போட்டி இன்று இரவு 6 மணிக்கு பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரின் 7ஆவது சீசன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், இடம் பெற்ற 8 அணிகளில் தற்போது நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன.
டிராபி யாருக்கு? டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் பலப்பரீட்சை!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசனின் இறுதிப் போட்டி இன்று இரவு 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நெல்லை மற்றும் கோவை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
வாழ்க்கை ஒரு வட்டம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பித்த இடத்திற்கே வந்த விராட் கோலி ஹேப்பி!
கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 4 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணி 3 போட்டிகளிலும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகளின் பட்டியல்!
இதுவரையில், லைகா கோவை கிங்ஸ் அணி, சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியுடன் இணைந்து டைட்டில் வென்றுள்ளது. ஆனால், நெல்லை ராயல் கிங்ஸ் அணி இதுவரையில் ஒரு முறை கூட டைட்டில் பெறவில்லை. இந்த முறை கண்டிப்பாக டைட்டில் பெறுவதற்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி கடுமையாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), பி சச்சின், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் யுஆர் ரஹ்மான், எம் முகமது, மணிமாறன் சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வள்ளியப்பன், யுதீஸ்வரன், கே கௌதம் தாமரைக் கண்ணன், கிரண் ஆகாஷ், ஆர் திவாகர், பி ஹேம்சரண், கேஎம் ஓம் பிரகாஷ், பி வித்யுத்
ஆசிய கோப்பை 2023 அட்டவணை தயார்: பாகிஸ்தானில் போட்டி இல்லை!
நெல்லை ராயல் கிங்ஸ்:
அருண் கார்த்திக் (கேப்டன்), பி சுகேந்திரன், அஜிதேஷ் குருசுவாமி, நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், சோனு யாதவ், என்எஸ் ஹரிஷ், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்ஷய் ஜெயின் எஸ், ஆதித்யா அருண், ஆர் மிதுன், வீரமணி, ஸ்ரீ நெரஞ்சன், லட்சுமி நாராயணன் விக்னேஷ், கார்த்திக் மணிகண்டன், எஸ்.ஜே.அருண் குமார், இம்மானுவேல் செரியன், என்.கபிலன், அஸ்வின் கிறிஸ்ட்
ஆப்பிள் சாப்பிட கூட அலாரம் வைக்கிறார்: புஜாராவைப் பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்!
The four grounds used for
at Coimbatore
at Natham (near Dindigul)
at Kattuveppilaipatti (near Salem)
at Tirunelveli pic.twitter.com/1nAWQRFljo
We are in for a Grand final and closing ceremony! 🤩
மிஸ் பண்ணிடாதிங்க மக்களே!🏏💥💪🏼 pic.twitter.com/ULCch5KL1X