பிசிசிஐ தலைவர் பதவி விவகாரம்..! கங்குலியை வைத்து அரசியல் செய்யும் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக

By karthikeyan VFirst Published Oct 12, 2022, 11:53 AM IST
Highlights

பிசிசிஐ தலைவராக இருக்கு சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவர் பாஜகவில் சேராததால் அவரை மீண்டும் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யாமல் பாஜக கழற்றிவிடுவதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், அதை பாஜக மறுத்துள்ளது. 
 

பிசிசிஐ தலைவராக இருந்துவரும் சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைகிறது. தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகிய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிறது. வரும் 18ம் தேதி மும்பையில் நடக்கும் பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பிசிசிஐ செயலாளராக இருக்கும், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா அந்த பதவியில் மீண்டும் தேர்வு செய்யப்படவுள்ளார். ஆனால் தலைவராக இருக்கும் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பளிக்காமல் அவர் நீக்கப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க - பட்லர் கூறிய காரணம், மேத்யூ வேடின் செயலை விட மட்டமா இருக்கு..! பயந்தாங்கோலி பட்லர்

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். எனவே அவர் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கங்குலிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாதது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்தது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி. இதுகுறித்து பேசிய  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க மாநில செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ், சௌரவ் கங்குலி மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் இது. இதுதொடர்பாக பாஜக விளக்கமளிக்க வேண்டும். பிசிசிஐ-யின் செயலாளராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு செய்யப்படும்போது, கங்குலி மட்டும் நீக்கப்படுவதாக விமர்சித்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி சாந்தனு சென்னும் அதே கருத்தை முன்வைத்து பாஜகவை விமர்சித்தார். 

கடந்த ஆண்டு நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன் மேற்கு வங்கத்தில் மிகுந்த செல்வாக்கும் மக்களின் ஆதரவும் கொண்ட சௌரவ் கங்குலியை பாஜக வளைத்துப்போட முயற்சிப்பதாக அப்போதே தகவல் வெளியானது. கங்குலியை அமித் ஷா அவரது வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்தார். ஆனால் கங்குலி பிடி கொடுக்கவில்லை. 

இந்த நிலையில் தான், கங்குலி பாஜகவின் முயற்சிக்கு பிடி கொடுக்காததால், அதற்கான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான், அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால் பாஜக சார்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.

இதையும் படிங்க - இந்திய அணியை பார்த்தா பெரிய ஆச்சரியமா இருக்கு..! மிரண்டுபோன பாக்., முன்னாள் ஜாம்பவான்

இதுதொடர்பாக பேசிய பாஜக தலைமை செய்தித்தொடர்பாளர் ஷாமிக் பட்டாச்சார்யா, இந்த விஷயத்தை விவாதிக்கவே கூடாது. இதுதொடர்பாக விவாதிப்பதே, கங்குலியை ஒரு கிரிக்கெட்டராக நாம் அவமதிப்பதாகும். பாஜகவிற்கு தனிப்பட்ட கொள்கை, சித்தாந்தம் உள்ளது. இதுமாதிரியான விஷயங்களை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!