இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் – திலக் வர்மா நம்பிக்கை!

By Rsiva kumar  |  First Published Aug 5, 2023, 1:22 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா, இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Ziva Dhoni School Fees: 3ஆவது படிக்கும் தனது மகள் ஷிவாவிற்கு பள்ளி கட்டணமாக தோனி எவ்வளவு கட்டுகிறார் தெரியுமா?

Tap to resize

Latest Videos

இதில், அதிகபட்சமாக இந்தப் போட்டியின் மூலமாக அறிமுகமான திலக் வர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 39 ரன்கள் குவித்தார். தற்போது 21 வயதாகும் திலக் வர்மா இவ்வளவு சீக்கிரம் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது என்று திலக் வர்மா கூறியுள்ளார். அவர் பேசும் வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்திய அணிக்கு 5 சதவிகிதமும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 10 சதவிகிதமும் அபராதம்!

நடந்து முடிந்த ஐபிஎல் 16ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா இடம் பெற்று விளையாடினார். இதில் 11 போட்டிகளில் விளையாடி 343 ரன்கள் குவித்தார். இதற்கு முன்னதாக கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 397 ரன்கள் குவித்தார்.

அதிரடி ஆட்டம் காட்டிய ரியான் பராக்; தியோதர் டிராபியை கைப்பற்றிய தெற்கு மண்டலம்!

“சிறுவயது முதலே, இந்தியா உலகக் கோப்பையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. என் மனதில், உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று நான் எப்போதும் யோசிப்பேன். நான் இந்த யோசனையில் சென்று பேட் செய்து உலகக் கோப்பையை வெல்வேன் என்பதை தினமும் நினைத்துப் பார்ப்பேன்,” என்றார்.

இந்திய அணியில் தோனி எப்படி இடம் பெற்றார்? தெரியாத விஷயத்தை பகிர்ந்த சபா கரீம்!

தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுவிட்டேன். அடுத்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டியது தான். இந்தியா உலகக் கோப்பையை விரைவில் வெல்லும். இது ஒரு பெரிய உணர்வு, என்னால் அதை வெளிப்படுத்த முடியாது, எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன் எண்று கூறியுள்ளார்.

click me!