ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய இலங்கை ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா ஓய்வு..!

Published : May 03, 2021, 04:15 PM IST
ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய இலங்கை ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா ஓய்வு..!

சுருக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான திசாரா பெரேரா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.  

இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா. 2009ம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான திசாரா பெரேரா, இலங்கை அணிக்காக 166 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி 2338 ரன்கள் அடித்திருப்பதுடன், 175 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 84 டி20 போட்டிகளில் ஆடி 1204 ரன்களை அடித்ததுடன், 51 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இலங்கை அணியின் பிரதான வீரராக திகழ்ந்த திசாரா பெரேரா, வெறும் 6 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார்.

2014 டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று கோப்பையை வென்ற இலங்கை அணியில் திசாரா பெரேரா ஆடினார். அவர் வின்னிங் ரன்களை அடித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி அண்மையில் சாதனை படைத்திருந்தார் திசாரா பெரேரா. அந்த சாதனையை செய்த ஒரே இலங்கை வீரர் திசாரா பெரேரா மட்டுமே.

32 வயதே ஆன திசாரா பெரேரா, இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் திசாரா பெரேரா.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!