#IPL2021 கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா..! இன்று நடக்கவிருந்த #RCBvsKKR போட்டி ஒத்திவைப்பு

Published : May 03, 2021, 02:44 PM IST
#IPL2021 கேகேஆர் வீரர்கள் இருவருக்கு கொரோனா..! இன்று நடக்கவிருந்த #RCBvsKKR போட்டி ஒத்திவைப்பு

சுருக்கம்

கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் இன்று நடக்கவிருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் இதுவரை ஐபிஎல் 14வது சீசன் வெற்றிகரமாக எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த நிலையில், தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்று ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கவிருந்த நிலையில், கேகேஆர் அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கேகேஆர் அணியில் ஆடும் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னரான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இன்று நடக்கவிருந்த ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் ஆடும் வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் ஐபிஎல் தொடர்ந்து நடைபெறுவது சவாலான காரியமாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!