#IPL2021 கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை..! இனி எப்போது ஆடுவார்னே தெரியல.. பஞ்சாப் அணி மரண அடி

By karthikeyan VFirst Published May 2, 2021, 6:33 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு குடல் அழற்சி(Appendicitis) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால், டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில ராகுல் ஆடமாட்டார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 6 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்ற நிலையில், 7வது போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, அடுத்தடுத்த வெற்றிகளை எதிர்நோக்கியுள்ளது.

இன்று டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில் வழக்கம்போலவே கேஎல் ராகுல், சிறப்பாக ஆடி 331 ரன்களை குவித்து, இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை பெற்றிருந்த நிலையில், அவர் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆர்சிபிக்கு எதிராக அபாரமாக ஆடி 91 ரன்களை குவித்த ராகுலுக்கு, நேற்றிரவு திடீரென அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. முதலில் சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில், அதை மீறியும் தொடர் வலி இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பரிசோதித்ததில் குடல் அழற்சி இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

எனவே இன்றைய போட்டியில் ராகுல் ஆடமாட்டார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், ஓய்வில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளிலும் ஆட வாய்ப்பில்லை. இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மரண அடியாக இருக்கும். ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவரை பஞ்சாப் அணி மிஸ் செய்யும்.
 

click me!