#IPL2021 கேப்டன்சியிலிருந்து தூக்கியதும் வார்னரின் ரியாக்‌ஷன் என்ன..? டாம் மூடி ஓபன் டாக்

By karthikeyan VFirst Published May 2, 2021, 5:04 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதும், வார்னர் என்ன ரியாக்ட் செய்தார் என்று சன்ரைசர்ஸ் அணியின் இயக்குநர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு 2016ம் ஆண்டு கோப்பையை வென்று கொடுத்தவர் கேப்டன் டேவிட் வார்னர். டேவிட் வார்னர் பேட்டிங் மற்றும் கேப்டன்சி என அனைத்துவகையிலும் சிறந்த பங்களிப்பு செய்த டேவிட் வார்னர், இந்த சீசனில் பேட்டிங்கில் திணறிவந்த நிலையில், ஆடும் லெவன் காம்பினேஷனில் அவருக்கு மாற்று வீரரை இறக்க வேண்டிய கட்டாயத்தில் அவரை நீக்கியது சன்ரைசர்ஸ் அணி.

வார்னர் கேப்டனாக இருப்பதால், அவரை அணியிலிருந்து நீக்க முடியாத சூழல் இருந்ததால், வேறு வழியில்லாமல் கேப்டன்சியை கேன் வில்லியம்சனிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வார்னருக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காமல் ஓரங்கட்டியது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம்.

வார்னரை நீக்கியது கண்டிப்பாகவே மிகவும் கடினமான முடிவுதான். அதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார் என்று டாம் மூடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டாம் மூடி, வார்னரின் நீக்கம் கண்டிப்பாகவே கடினமான முடிவு. அந்த முடிவை கேட்டதுமே வார்னர் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தார். கண்டிப்பாக எந்த வீரராக இருந்தாலும் அந்த அதிருப்தி இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு அணியாக, அணியின் தேவையை உணர்ந்துகொண்டார். 4 வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில், 2 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் ரஷீத் கான் என்பதுதான் எங்கள் அணியின் காம்பினேஷன். பேட்ஸ்மேன்களை பொறுத்தமட்டில் பேர்ஸ்டோவும் வில்லியம்சனும் நல்ல ஃபார்மில் இருப்பதால், முழுக்க முழுக்க அணி காம்பினேஷனை கருத்தில்கொண்டே வார்னரை நீக்க வேண்டியதாயிற்று என்று டாம் மூடி தெரிவித்தார்.
 

click me!